tamilnadu

img

சமாஜ்வாதி தலைவர் சுட்டுக்கொலை 

ஜான்பூர்: 
சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் லால்ஜி யாதவ் ஸ்கார்பியோ வகை காரில் ஜான்பூருக்கு சென்றுகொண்டிருந்தார்.முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்தனர்.உட்லி கிராமம் அருகே லால்ஜி சென்ற கார் வேகத்தடையில் மெதுவாக சென்றதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த மாமர்மக்கும்பல் துப்பாக்கி மூலம் லால்ஜியை சல்லடையாக துளைத்தனர்.

படுகாயம் அடைந்த லால்ஜி சம்பவ இடத்திலேயே பலியானார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த பொழுது லால்ஜி முக்கிய காண்ட்ராக்டராக இருந்தவர்.காண்ட்ராக்ட் பிரச்சனை தொடர்பாக இவர் மீது பல குற்ற வழக்குகள் அதிகம் உள்ளது.

;